logan

logan

Tuesday, August 31, 2010

கவிதைகள்

கவிதைகள் என்ற வார்த்தையை கேட்டதும் மனம் பட்டாம்பூச்சியாய் பறந்து கற்பனையில் மிதப்பது தெரிகிறது. ஆம், கவிதைகளை தேடி அலைபவர்கள் பெரும்பாலும் காதல் வயப்பட்டவர்களாய்தான் இருப்பார்கள். ஒருவரை கவிஞராய் ஆக்குவதில் காதலின் பங்கு பெரியது என்பதை நான் ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் கவிதை எழுத தெரியாத நான், புதுக்கவிதை என்ற பெயரில் பள்ளிப் பருவத்தில் காதல் கவிதைகள் எழுதிக் குவித்தை மறக்க முடியாது. மகிழ்ச்சிப் பருவம், எதிர்காலப் பருவம் பள்ளிப் பருவம், நாம் அங்கு என்ன கற்றுக் கொண்டமோ அவை அனைத்தும் நமது எதிர் காலத்தை நிர்ணயிக்கும்.

கவிதை எழுத நாம் பெரிதாய் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கருத்துக்களை உள்வாங்கும் அறிவும் , புது வார்த்தைகளை புகுத்தும் திறனும் இருந்தாலும் போதும், எவரும் கவிதைகள் எழுதலாம். அதிலும் நம் இளம் வயதினர் எழுதும் காதல் புதுக்கவிதைகள் நமது தமிழ் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாய் உள்ளது.


அழிந்துவரும் மொழிகளில் ஒன்று என சிலர் தமிழை பட்டியிலிட்டுக் கொண்டுருந்தாலும், நம் தாய் மொழியாம் செந்தமிழ் மேலும் மேலும் வளர்ச்சியைக் கண்டு கொண்டுதான் இருக்கிறது. அத்தமிழ் மொழியில் நாம் வடிக்கும் கவிதைகள் / கதைகள் / பாடல் மற்றும் கட்டுரைகள் என்றும் நமது பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

கவிதை என்பது காதலை மட்டும் வெளிப்படுத்தும் காரணி அல்ல நம் மனதின் அனைத்து நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் கண்ணாடி. இக்கவிதையை பலவாறாக பிரிக்கலாம். அவை,

1. காதல் கவிதை
2.காதல் சோகக் கவிதை
3. காதல் தோல்விக் கவிதை
4. நட்புக் கவிதை
5. சுதந்திரத் தாகக் கவிதை
6. மகிழ்ச்சிக் கவிதை
7. பெண் கவிதை
8. வெற்றிக் கவிதை
9. பள்ளிக் கவிதை
10. உள்வுக் கவிதை
11. எதிர்மறைக் கவிதை
12. ஹைக்கூ கவிதை
என பலவாறு சுழ்நிலைக் ஏற்றவாறு பேர் கொள்வது கவிதை.

கவிதைகள் எழுதுவது என்பது ஒர் பொழுது போக்காய் தன் மனதை வடித்துவரும் பலர் மத்தியில் காதல் கவிதை எழுதுவதற்காக இணையத்தில் கவிதைகளை தேடும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். அப்படி நாம் “கவிதைகள்” என்று தேடி நமக்கு கூகுளில் முதல் பக்கத்தில் விடையாய் வருவது பிரியன் கவிதைகள், தமிழ்க் கவிதைகள் , எழுத்து தமிழ்க் கவிதை (tamil kavithaigal) , ஈகரை கவிதைகள் , கவிதைச் சாலையில் நட்புக் கவிதைகள் , காதல் கவிதைகள், நவீன ஹைக்கூ கவிதைகள், தமிழ் மன்றக் கவிதைகள், அந்தரங்க கவிதைகள், என பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. அதாவது தமிழ் இணைய தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதாகும். அதிலும் பெரும்பான்மையான கவிதைப் பக்கங்கள் ப்ளாக்கர் வலைப்பூவில் அமைந்திருக்கும்.

முன்பு ஒரு நாள் கவிதைகள் என்று நான் தேடி முதல் இடத்தைப் பிடித்திருந்த பக்கம் ஈகரை.காம்-ன் கவிதைகள். ( ஈகரை ஒர் சிறந்த கவிஞர்களை உறுப்பினர்களாக கொண்டப் வலை தளம்). தற்பொழுது அவர்கள் தன் வலை உறுப்பினர்களின் கவிதைகளை அச்சாய் எடுத்து புத்தகமாய் வெளியிட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பலர் தன் வலைப்பூவில் தன் கவிதைகளை எழுதி வந்தாலும் ஈகரையில் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஒரேஎழுதிவருகின்றனர். தற்பொழுது ஈகரை தனது முதல் இடத்தை படுகை இடம் விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதை யார் பறித்தார்களோ, இன்று நான் பார்க்கும் போது ஈகரை இல்லை.

சரி, படுகை.காம் கூகுளில் முதன்மையாய் வர உறுப்பினர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?
இது போதும். ஆம் நாம் கூகிளில் முதல் வரவேண்டும் என்ற ஆர்வம் ஒன்றே போதும் அடுத்த பதினைந்து நாட்களில் நாம் கூகுளில் எவர் ஒருவர் “கவிதைகள்” என்று தேடினாலும் நமது படுகை தான் முதல் பக்கமாய் தெரியும். ஆமாங்க ஆர்வமாய் இருக்கிற நீங்க ஒரு கவிதை எழுத மாட்டீங்களா? உங்களது கவிதை என்ற பெயரில் கிறுக்கல் கூட ஒரு நாள் மற்றொருவரால் ரசிக்கப்படாலாம்.

Image
வாங்க, கவிதை எழுதலாம் வாங்க:

கவிதை என்ற பெயரில் நாங்கள் கிறுக்கியுள்ளதை நீங்க பார்க்கணுமா?
http://forum.padukai.com/topic271.html

அதிலும் ஒரு கண் கொண்டு நாங்கள் எழுதிய கிறுக்கல்கள் செம போர். அப்புறம் காதல் தோல்விக் கவிதை என்று ஒரு புதுத் தலைப்பிட்டு எழுதிய புது ஹைக்கூ கவிதை (Tamil kavithai), செம அறுவை. இப்படி நாங்கள் செய்யும் லூட்டியுடன் இணைந்து நீங்களும் ஒரு கவிஞராய் பிரசவிக்க ஆசையா!!! வாங்க கவி எழுதலாம் !


என்ன படிக்கவே சகிக்கலையா?
தெரியும் நீங்க இப்படித்தான் சொல்லுவிங்கன்னு, ஏற்கனவே 62% பேர் வந்த நேரத்திலே மறு கால் வைக்காம திரும்பிட்டாங்க, ஆனால் மீதி 38%ல 10% பேர் எங்க தளத்துல ஒரு அன்பராய் பதிவுப் பண்ணியிருக்காங்க. அதுல நீங்க எந்த ரகம். எப்படியாயினும் நாங்க சின்னவங்க தான் , ஒன்றும் தெரியாதவங்கதான், ஆனால் பெரியவங்க நீங்க வந்து கொஞ்சம் சொல்லிக் குடுத்தா வேண்டாம்னா சொல்லிடப் போறோம்.

எங்களுக்கு தெரிந்தவற்றை நாங்க பண்ணுறோம், உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கு சொல்லிக் கொடுங்க நாங்க கத்துப்போம், சின்னப் பசங்க நாங்க.

No comments:

Post a Comment